ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியல்..

Pulli Pattiyal IPL-ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியல்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2023 ) அணிகள் குறித்த விவரங்கள், ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணி வீரர்களின் முழுமையான பட்டியல், புள்ளிகள் அட்டவணை குறித்த விவரங்களை இங்கே காணுங்கள்..

Update: 2023-05-22 09:15 GMT

Pulli Pattiyal IPL

Pulli Pattiyal IPL-ஐபிஎல் 2023 தொடரின் ஆட்டங்கள் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகின்றன. யார் முதல் இடத்தைப் பெறுவார் யார் யார் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 10 அணிகளும் தங்களுக்குள் மோதி யார் சிறந்த அணி என நிரூபிக்க போராடி வருகின்றன.

ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில் இதுவரை ஆடியிருக்கிறது. அதில் 1 போட்டியில் தோற்றிருந்தாலும் 3 ஆட்டங்களில் வென்றிருக்கிறது. ஹைதராபாத், டெல்லி, சென்னை உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்திருக்கிறது ராஜஸ்தான் அணி.

லக்னோ அணி இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களில் 3ல் வென்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. சென்னைக்கு எதிராக தோல்வியடைந்திருக்கிறது லக்னோ அணி. டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு அணிகளுக்கு எதிராக வெற்றியை ருசித்திருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

குஜராத் அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியிருக்கிறது. இதில் 1 ஆட்டத்தில் தோல்வியடைந்திருக்கிறது. 3 ஆட்டங்களில் வென்றிருக்கிறது. சென்னை, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது குஜராத் அணி. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு தோல்வியை பெற்றிருக்கிறது.

கொல்கத்தா அணி இதுவரை 2 வெற்றி, 2 தோல்விகளைப் பெற்றிருக்கிறது. குஜராத், பெங்களூரு அணிகளுடன் ஆடிய ஆட்டங்களில் வெற்றியை ருசித்திருந்த கொல்கத்தா அணி, ஹைதராபாத், பஞ்சாப் அணிகளுடன் தோல்வியடைந்திருக்கிறது.

சென்னை அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் பெற்றிருக்கிறது. இதே போல பஞ்சாப், ஹைதராபாத் அணிகளும் 2 வெற்றி 2 தோல்விகளைப் பெற்றிருக்கிறது.

பெங்களூரு மும்பை அணிகள் 3 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றியை ருசித்திருக்கின்றன. டெல்லி அணி 4 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி கடைசி இடத்தில் இருக்கின்றது. 

அணி

ஆட்டங்கள்வெற்றிதோல்விபுள்ளிகள்
குஜராத்139418

சென்னை

148517

லக்னோ

137515

பெங்களூரு

137614

ராஜஸ்தான்

147714

மும்பை

137614

கொல்கத்தா

136712

பஞ்சாப்

146812

டெல்லி

145910
ஹைதராபாத்

13

49

8

Tags:    

Similar News