டாஸ் வென்ற தோனி! ஐபிஎல் 2023 கோப்பையை வெல்ல அட்டகாச முதல் முடிவு!
நேற்று மழையால் தடைபட்ட போட்டி இன்று ரிசர்வ் நாளில் தொடங்கியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றுள்ளது;
ஐபிஎல் 2023 தொடரின் லீக் போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதி தங்களின் பலத்தை பரிசோதிக்கப்போகின்றன. அதற்கான இறுதிப் போட்டி நேற்று அறிவிக்கப்பட்டு பின் மழையால் பின்வாங்கப்பட்டிருந்த நிலையில், ரிசர்வ் நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்றிருக்கிறது.
ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. ஆரம்பம் முதல் இப்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 முறை ஃபைனலுக்கு வந்திருக்கிறது. அதில் 4 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்த முறையும் கோப்பையை வென்று 5 முறை சாம்பியன் சாதனையை சமன் செய்யுமா அல்லது இரண்டாவது முறை கோப்பையை வெல்ல நினைத்திருக்கும் குஜராத் அணியிடம் வெற்றியை பறிகொடுக்குமா? என்பதை இன்றைய போட்டியின் முடிவில் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமான நேரத்துக்கு டாஸ் போடப்பட்ட நிலையில், தோனி டாஸை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் செய்யும் என்று கூறியுள்ளார். இதனால் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
குஜராத் அணியின் வீரர்கள் பட்டியல்
விருதிமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்ஷன், விஜய் ஷங்கர், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, மோகித் சர்மா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி
சென்னை அணியின் வீரர்கள் பட்டியல்
ருத்துராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்யா ரஹானோ, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி, தீபக் சாஹர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மகீஷ் தீக்ஷனா