ஐபிஎல் 2022: இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ, பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை

இன்று புனேயில் நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.;

Update: 2022-04-29 13:42 GMT

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு புனே எம்சிஏ ஸ்டேடியத்தில் நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

அறிமுக அணியான லக்னோ நடப்பு தொடர் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக், தீபக் ஹூடா, ஸ்டோனிஸ் நல்ல நிலையில் உள்ளனர். இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி பஞ்சாப் கிங்ஸ் அணி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. நடப்பு தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள கேப்டன் மயங்க் அகர்வால் மற்ற ஆட்டங்களில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அந்த அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டன் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல், பந்துவீச்சில் ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங் பலம் சேர்க்கின்றனர்.

முந்தைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்த உற்சாகத்தில் பஞ்சாப் அணியும், கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியான மும்பை இந்தியன்சை தாேற்கடித்த லக்னோ அணியும் இன்று களம் காண்கிறது. பஞ்சாப், லக்னோ அணிகள் சம பலத்தில் இருப்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.

Tags:    

Similar News