ஐபிஎல் 2022: கோப்பையை வென்ற குஜராத் டைடன்ஸ்
IPL 2022: ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.;
IPL 2022: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா கலை நிகழ்ச்சிகள் மிக கோலாகலமாக நிறைவு பெற்றதை அடுத்து போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பட்லர் உடன் ஜோடி சேர்ந்த சாம்சன் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தில் சாய் கிஷோரிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 39 ரன்கள் எடுத்து பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
IPL 2022: அடுத்து வந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
131 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சாஹா 5 ரன்கள், வேட் 8 ரன்களில் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - கேப்டன் பாண்டியா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சஹால் இந்த ஜோடியை பிரித்து பாண்டியாவை 34 ரன்களில் வெளியேற்றினார்.
ஒருமுனையில் கில் நிதானமாக விளையாட அவருக்கு மில்லர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இறுதியில் குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
IPL 2022: அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.