உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் அன்னு ராணி தகுதி

World Athletics Championships- தேசிய சாதனை வீராங்கனையான அன்னு ராணி, உலக சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Update: 2022-07-21 04:43 GMT

World Athletics Championships- 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இன்று மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அன்னு ராணி, சிறப்பாக விளையாடி, கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அத்துடன் 8வது இடத்தை பிடித்தார்.

இதன்மூலம் 2வது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி தகுதி பெற்றார். 2019 இல் தோஹாவில் 8வது இடத்தைப் பிடித்த பிறகு உலக ஈட்டியின் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார் . ஜூலை 22 சனிக்கிழமை காலை ஒரேகானில் நடக்கும் இறுதிப் போட்டியில் விளையாடுவார்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர் ஆகியோரை தொடர்ந்து, அன்னு ராணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News