டி20 கிரிக்கெட் -U 19 உலக கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் சாம்பியன்
டி20 -அண்டர் 19 உலக கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்து உள்ளது.;
வெற்ளிக்களிப்பில் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் டி 20இந்திய மகளிர் அணியினர்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலகக்கோப்பையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வென்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவின் ஜொகனர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 17.1 ஓவரில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 69 ரன்கள் எடுத்தால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற முனைப்புடன் இந்தியா களமிறங்கி விளையாடியது.
இந்திய அணி வீராங்கனைகள் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 14 ஓவரில் 69 ரன்களை எடுத்தனர். இதன் காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி டி20 கிரிக்கெட்டில் மகளிருக்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது. இந்த போட்டி தொடங்கப்பட்ட முதல் கோப்பையை இந்திய மகளிர் அணி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வரலாற்று சாதனையை இந்திய மகளிர் அணி செவாலி வர்மா தலைமையில் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட் போட்டி முதன் முதலாக தொடங்கப்பட்ட போது கோலி தலைமையிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆண்கள் அணி தான் சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்போது மகளிருக்கான டி20, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியிலும் முதல் கோப்பையைஇந்திய மகளிர் அணியே வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.