உலக சாம்பியன்ஷிப் தடகள இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி

உலக சாம்பியன்ஷிப் தடகள தொடர் ஓட்டத்தில் இறுதி போட்டிக்குள் இந்திய அணி நுழைந்து உள்ளது.

Update: 2023-08-27 15:14 GMT

இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி வீரர்கள்.

ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் கடந்த 19ம் தேதி உலக தடகள சாம்பியன் ஷிப் கோப்பைக்கான போட்டிகள் தொடங்கியது. இதில் நீளம்தாண்டுதல், ஓட்டப்பந்தயங்களில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுவரை ஒருபதக்கம் கூடஇந்தியாவுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் 4x400 மீ தொடர் ஓட்டத்தில் இந்திய ஆடவர் அணி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

முகமது அனஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோரைக் கொண்ட இந்திய ஆடவர் அணி 4x400 மீ தொடர் ஓட்டத்தில் தகுதி சுற்றில் 2.59.05 வினாடிகளில் கடந்து 2வதுஇடத்தை பிடித்து பைனலுக்குள் நுழைந்தது. இதன்மூலம் வரலாற்றில் முதல் முறையாக தடகள உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன் ஜப்பான் அணி 2:59.51 வினாடிகளில் கடந்ததுதான் ஆசிய சாதனையாக இருந்தது. இதனை முறியடித்து இந்திய ஜோடி புதிய ஆசிய சாதனை படைத்துள்ளது.

தகுதி சுற்றில் முதலில் ஓடிய முகமது அனஸ், 6வது இடத்தில் பின்தங்கிய நிலையில் 2வதாக ஓடிய அமோஜ் ஜேக்கப் 2வது இடத்திற்கு வந்தார். தொடர்ந்து 3வது மற்றும் 4வதாக ஓடியமுகமது அஜ்மல் மற்றும் ராஜேஷ் ரமேஷ் 2வது இடத்தை தக்க வைத்துக்கொண்டனர். 9 அணிகள் கலந்துகொண்ட ஹீட் 1 தகுதி சுற்றில், அமெரிக்கா 2:58.47 வினாடிகளில் முதல் இடத்தையும், இங்கிலாந்து 2:59.42 வினாடிகளில் கடந்து 3வதுஇடத்தையும் பிடித்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தன.

தகுதிசுற்றில் 2 ஹீட்ஸ்களுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக 2வது இடத்தை இந்தியா பிடித்ததால் இன்று நள்ளிரவு நடைபெறும் பைனலில் பதக்கம்வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஷ் ரமேஷ் திருச்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News