டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி தோல்வி

இந்திய அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது நடப்பு சாம்பியன் பெல்ஜியம். இந்திய அணிக்கு வெண்கலப் பதக்க வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

Update: 2021-08-03 04:14 GMT

ஹாக்கி-இந்திய ஆடவர் அணி

இந்திய அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது நடப்பு சாம்பியன் பெல்ஜியம். இந்திய அணிக்கு வெண்கலப் பதக்க வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

டோக்கியோ ஒலிம்ப்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் இந்திய அணி போராடித் தோல்வி கண்டது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்களால் முடிந்ததை வழங்கியது; அதுதான் முக்கியம். அடுத்த போட்டி மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.இந்தியா எங்கள் வீரர்களின் மீது பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி ட்வீட்.


இந்திய அணி முதல் கால் மணி நேர ஆட்டத்தில் 2-1 என்று முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்றிக்ஸ் ஹாட்ரிக் கோல்களை அடிக்க பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நன்றாகத் தொடங்கி போகப் போக இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தை கைவிட்டு, தடுப்பாட்டத்திலும் சோடை போனதால் கடைசியில் சரமாரியாக பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்புகளாகக் குவிந்தது. இதில் ஒன்றை அலெக்சாண்டர் கோலாக மாற்றினார். கடைசியில் பெல்ஜியம் வீரர் இந்திய கோல் அருகே அடித்த ஷாட் ஸ்ரீஜேஷுக்கு முன்னால் இருந்த இந்திய வீரரின் காலில் பட்டதால் பெனால்டி ஸ்ட்ரோக்கை நடுவர் கொடுக்க அதையும் ஹென்றிக்ஸ் கோலாக மாற்ற 4-2 என்று பெல்ஜியம் முன்னிலை பெற்றது.


கடைசியில் கோல் கீப்பர் வேண்டாம் அதற்குப் பதில் களத்தில் இறங்கி ஆட இன்னொரு வீரரை அனுப்பியதால் கோல் போஸ்ட் காலியாக இருந்த்து அதைப் பயன்படுத்தி பெல்ஜியம் இன்னொரு கோலை அடித்தது. ஆட்டம் தொடங்கிய போது பெல்ஜியம் அணி 2 வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பெல்ஜியம் வீரர் லாய்க் லூபர்ட் கோலாக மாற்றினார்.

ஆனால் இந்திய அணி அந்தக் கட்டத்தில் தாக்குதல் ஆட்டத்தை உக்கிரப்படுத்த 7வது நிமிடத்தில் இந்திய அணிக்கு 2 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. இதில் ஒன்றை ஹர்மன்பிரீத் கோலாக மாற்றி சமன் செய்தார்.

8 வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து இந்திய வீரர் அமித் ரோகிதாஸ் அருமையாக ஒரு பந்தை பாஸ் செய்ய அதை மந்தீப் சிங் கட்டுப்படுத்தி கோலாக மாற்ற இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பிறகு இந்திய அணி கோட்டை விட்டது. இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் பச்சை அட்டை காட்டப்பட்டு பெஞ்சுக்கு அனுப்பப்பட்டதையடுத்து இந்திய வீழ்ச்சி தொடங்கியது. இதில் பெல்ஜியம் 5-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறியது.


Tags:    

Similar News