இந்திய கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல அனுமதி!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.;
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர்களில் பங்கேற்க இந்திய அணி வருகிற 3ம் தேதி இங்கிலாந்து செல்கிறது.
இதனால் இந்திய வீரர்கள் பங்குபெறும் ஆட்டங்கள் ஜூன் 18ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடக்கிறது. 4 மாதங்கள் தங்கவேண்டியிருப்பதால் குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்திய வீரர்களின் கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரடன் இங்கிலாந்து செல்ல அனுமதி அளித்துள்ளது.