தென் ஆப்பிரிக்காவிற்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய கிரிக்கெட் அணி

Update: 2023-12-21 15:11 GMT

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு இந்திய அணி 297 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது 

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள், மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் ஏற்கனவே  நடைபெற்ற டி20 போட்டிகளில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஜோகன்ஸ் பார்க் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெபேஹாலில்  நடந்த இரண்டாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை துவம்சம் செய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையை எட்டியது.

இந்த நிலையில் இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான  மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் இன்று நடந்து வருகிறது.

இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரஜப் பட்டிதார் மற்றும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தமிழக வீரர் சாய் சுதர்சன் களம் இறங்கினார்கள். ரஜப் பட்டிதார் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சாய் சுதர்ஷன் 15 ரன்களில் அவுட் ஆனார்.

இதனை தொடர்ந்து களம் இறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக நின்று 108 ரண்களை குவித்தார். கேப்டன் கே.எல்.ராகுல் குறைந்த ரன்களில் அவுட் ஆனார். சஞ்சு சாம்சனுக்கு அடுத்த படியாக திலக் வர்மா 52 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் மிடில் மற்றும் பிற்பகுதியில்  வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி 50 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட நிலையில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அந்த வகையில் 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது.

Tags:    

Similar News