காமன்வெல்த் போட்டி: ஐந்தாம் நாளில் இந்தியா அசத்தல்

காமன்வெல்த் போட்டி ஐந்தாம் நாளில் இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி வென்றது

Update: 2022-08-02 16:15 GMT

லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி தங்க பதக்கம் வென்று வரலாறு படைத்தது

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன் ஞானசேகரன் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3- 1 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

தொடர்ந்து, காமன்வெல்த் 96 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் விகாஷ் தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார். 96 கிலோ எடைப் பிரிவில் மொத்தமாக 191 கிலோ எடையை தூக்கி விகாஷ் இரண்டாம் இடம் பிடித்தார்.


லான் பவுல்ஸ் போட்டியில் தங்க பதக்கம் வென்று வரலாறு படைத்தது

லான் பவுல்ஸ் விளையாட்டில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்து வரலாறு படைத்து இருந்தது. லவ்லி சௌபே , பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி அடங்கிய இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றனர். இந்த நிலையில் இந்த நால்வர் கொண்ட அணி இன்று நடந்த இறுதி போட்டியில் அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 17-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த விளையாட்டில் முன்னணி அணிகளை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்து இருக்கிறது.

இதுவரை இந்தியா பெற்றுள்ள பதக்கங்கள்

விளையாட்டு

தங்கம்

வெள்ளி 

வெண்கலம்

மொத்தம்

பளுதூக்குதல்

3327
ஜூடோ0111
லான் பவுல்ஸ்1001
டேபிள் டென்னிஸ் 1001
மொத்தம்54312


Tags:    

Similar News