தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தால் டி20 முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி
India Ws WI t20 2022 - இந்தியா -மேற்கிந்திய தீவுகளுக்கிடையே நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் நேற்று டிரிண்டாட் நகரில் முதல் டி20 போட்டி நடந்தது. ஹெட்மயர் அணிக்கு திரும்பிவிட்டதால் வெற்றி எங்களுக்கே என நிகோலஸ்பூரன் தெரிவித்தாலும் தோல்வியையே மே.இ. அணி தழுவியது. தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தினால் இந்திய அணியின் ஸ்கோர் மள மள என உயர்ந்தது.
India Ws WI t20 2022 - டிரிண்டாட் : இ்ந்தியா -மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான முதல் டி 20 போட்டி நேற்று டிரிண்டாட் நகரில் நடந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி தினேஷ் கார்த்திக் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடியால் 190 ரன்களை குவித்தது இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய ] டிரிண்டாட் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி தினேஷ் கார்த்திக் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடியால் 190 ரன்களை குவித்தது .
பின்னர் இரண்டாவது களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே அடித்தது. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக், தென்னாப்பிரிக்கா, அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கலக்கினார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக், 11, 12 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது தினேஷ் கார்த்திக்கிற்கு கொஞ்சம் சரிவாக காணப்பட்டது. இதனால் டி20 உலக கோப்பையில் இடம்பெற வேண்டும் என்றால் கார்த்திக், இந்த தொடரில் சாதிக்க வேண்டும் என்று விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.
தினேஷ் கார்த்திக் சரவெடி
இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறிய போது களமிறங்கியதினேஷ் கார்த்திக், தனது வழக்கமான அதிரடியை காட்டினார். அதிரடி ஆட்டம் இதன் மூலம் 19 பந்துகளில் கார்த்திக், 41 ரன்களை விளாசி இருக்கிறார்.இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். கார்த்திக்கின் இந்த ஆட்டத்தால், 140 ரன்கள் அடிக்க வேண்டிய இந்திய அணி அணி 190 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தின் மூலம் டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் பினிஷிங் ரோலுக்கு கார்த்திக் உறுதி செய்துவிட்டார்.
தோனி சாதனை முறியடிப்பு
இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோனியே செய்யாத சாதனை ஒன்றை கார்த்திக் செய்துள்ளார். அதாவது பேட்டிங் வரிசையில் 5 அல்லது அதற்கு கீழ் இறங்கி 5 முறை 200 ஸ்ட்ரைக் ரேட்க்கு மேல் 25 ரன்களுக்கு அதிகமாக அடித்துள்ள ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை கார்த்திக் படைத்துள்ளார். சாதனை விவரம் 41* (19) v வெஸ்ட் இண்டீஸ் 2022 55 (27) v தென்னாப்பிரிக்கா, 2022 33* (16) v நியூசிலாந்து, 2019 30 (13) v ஆஸ்திரேலியா, 2018 29* (8) v வங்கதேசம், 2018 .
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2