டி 20 தொடரை வெல்லுமா? இந்திய அணி மே.வ. அணி பலமாக உள்ளது ;நிக்கோலஸ்பூரன்
Today T20 Match Time- வெஸ்ட் இன்டீசில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள இந்திய அணியானது ஏற்கனவே நடந்த ஒரு நாள் போட்டியில் தொடரை கைப்பற்றியது.மேலும் தற்போது நடக்க உள்ள டி 20 போட்டிக்கு ரோகித் சர்மாவே அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் இந்திய அணி இத்தொடரையும் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இன்று இரவு 8 மணிக்கு முதல் போட்டி நடக்கிறது.;
Today T20 Match Time- இந்திய அணி, வெஸ்ட் இன்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஷிகர் தவான் தலைமையில் ஒருநாள் தொடரை கைப்பற்றியதுதற்போது ரோகித் சர்மா தலைமையில் 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இன்டீசோடு களம் காண இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியின் 20 ஓவர் போட்டியில் களமிறங்க இருக்கிறார் ரோகித் சர்மா. ரோகித்சர்மா வருகையானது நிச்சயம் இந்திய அணிக்கு பலமாக இருக்கும். ஏற்கனவே ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்திருப்பதால் இன்று நடக்க உள்ள 20 ஓவர் போட்டியில் நம்பிக்கையுடன் களம் காண இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.
கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவிக்கும்போது கூட, மற்ற போட்டிகளைப் போல், 20 ஓவர் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் அப்படி இருக்கும் என யாரும் எளிதாக நினைத்துவிட வேண்டாம் என தெரிவித்துள்ளார். 20 ஓவர் போட்டிகளில் முற்றிலும் மாறுப்பட்ட அணியாக நாங்கள் களமிறங்குவோம் என எச்சரித்துள்ள அவர், ஷிம்ரோன் ஹெட்மயர் எங்களுடைய அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஷிம்ரோன் ஹெட்மயர் அணிக்கு திரும்பியிருக்கும் அதேவேளையில் பேபியன் ஆலன் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடம் கிடைக்கவில்லை. . இளம் வீரர்கள் பலருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டியில் பேசியிருக்கும் நிக்கோலஸ் பூரன், "20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் வித்தியாசமாக இருக்கும் யாரும் ஒரு நாள் போட்டியில் நாங்கள் தோல்வியுற்றதால் எங்களை . குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம். ஷிம்ரோன் ஹெட்மயர் அணிக்கு திரும்பியிருப்பது எங்கள் அணிக்கு கூடுதல் பலம். . அவர் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சி. உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். எங்கள் அணியினர் சவாலுக்கு தயாராக உள்ளனர். ஒற்றுமையோடு ஒரு அணியாக இந்திய அணியை உற்சாகமாக எதிர்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2