இந்தியா- வெ.இ 3 வது டி 20 போட்டி சூர்யகுமார் ருத்ரதாண்டவம் இந்தியா அபார வெற்றி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 5 டி20 போட்டி நடக்கிறது. இதில் தலா 1 வெற்றியை பெற்ற நிலையில் நேற்று நடந்த 3 வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Update: 2022-08-03 04:51 GMT

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான  மூன்றாவது போட்டியில்  அரை சதத்தை கடந்த நிலையில் சூர்யகுமார்யாதவ்.

india vs west indies 3rd t20 match /india winஇந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே 5 டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு அதில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாம் போட்டியில் வெஸ்ட் இண்டீசும் தலா ஒரு வெற்றியை பெற்றன.

நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்செய்தது. பின்னர் களமிறங்கிய அணியின் துவக்க ஆட்க்காரர்களான ரோகித்சர்மாவும், சூர்யகுமாரும் விளையாடி வந்தனர். திடீரென ரோகித்சர்மா வெளியேறியதன் காரணமாக ஷ்ரேயஸ் அய்யர் களமிறங்கி சூர்யகுமாரோடு ஜோடி சேர்ந்தார்.

நேற்று செயின்ட் கிட்சில் நடந்த 3 வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.வெஸ்ட் அணியின்துவக்க ஆட்டகாரர்களாக கிங் மற்றும் மேயர்ஸ் களமிறங்கினர். அதிரடி தொடக்கம் தந்தாலும்மேயர்ஸ் விரைவிலேயே ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் பெவிலியன் திரும்பினார். பின்னர் கிங்குடன் கேப்டன் பூரன் ஜோடி சேர்ந்தார்.

india vs west indies 3rd t20 match /india winவெஸ்ட் இண்டீசில் கிங்(20) ,பூரன் (22),ரோவன் பவல் (23),ஹெட்மயர் (20) ஆகியோர் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்தனர். துவக்க ஆட்க்காரராக களமிறங்கிய மேயர்ஸ் அரைசதம் அடித்து புவனேஸ்வர்குமாரின் பந்தில் அவுட்டாகி 73 ரன்களில் நடையை கட்டினார். 20 வது ஓவரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி வெற்றி பெற 165 ரன்களை நிர்ணயித்தது.

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மாவும், சூர்யகுமாரும் விளையாடிக்கொண்டிருந்த போது ரோகித்சர்மா(11ரிடையர்ட் ஹட் முறையில் வெளியேறினார்.

ஷ்ரேயஸ் அய்யர் சூர்யகுமாருடன் ஜோடிசேர்ந்து 24 ரன்கள் எடுத்த நிலையில்அவுட்டானார். ஹர்திக்பான்ட்யா (4) ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். ரிஷப்பண்ட் (33),தீபக்ஹீடா (10) ரன்கள் எடுத்து பொறுப்பாக ஆடி இந்திய அணியினை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். சூர்யகுமார் ஆரம்பம் முதலே துடிப்பாக பந்தை சிக்ஸர், ஃபோருக்கு விளாசினார். இறுதியில் அவர் ஆடிய ருத்ரதாண்டவத்தினால் (76) இந்திய அணியானது எளிதாக வெற்றி பெற்றது.

india vs west indies 3rd t20 match /india winஇறுதியில் 19 ஓவர் முடிவில் இந்திய அணியானது 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2லும், வெஸ்ட் இண்டீஸ் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது நடக்க உள்ள 4வது டி20 போட்டியினை இந்திய அணி வென்றால் கோப்பை இந்திய அணிக்குதான் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இருந்தாலும் 4 வது ஆட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கும் என்பதால் இந்திய அணி போராடி ஜெயித்தாக வேண்டிய சூழ்நிலை உருவானாலும் ஆச்சர்யப்படுவதி்ற்கில்லை.

Tags:    

Similar News