ராஞ்சி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபாரவெற்றி
india vs southafrica 2 nd odi india won இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்றுராஞ்சியில் நடந்தது. இதில் இந்திய அணி 7விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.;
india vs southafrica 2 nd odi india won
தென் ஆப்பிரிக்க வீரரின் விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் இந்திய வீரர்கள்.
india vs southafrica 2 nd odi india won
இந்தியா-தென்ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியானது இன்று ராஞ்சியில் நடந்தது. பகலிரவுபோட்டியில் டாஸ்வென்ற தென்ஆப்பிரிக்கஅணி முதலில் பேட்டிங்செய்தது.தென்ஆப்பிரிக்க அணியின்துவக்க ஆட்டக்காரர்களாக குயின்டிகாக் மற்றும் ஜென்னிமான்மாலன்ஆகியோர் களமிறங்கினர். ஆனால் இந்திய பவுலர்களின் அபார பந்துவீச்சினால் அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். குயின்டிகாக் 5 ரன்களிலும், மாலன் 25 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்துபெவிலியன் திரும்பினர். 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த எய்டன் மர்க்ரம் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை விளாசி தள்ளினர்.
இதில் ஹெண்ட்ரிக்ஸ் 76 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். எய்டன் மர்க்ரம் 89 பந்துகளை சந்தித்து 79 ரன்களை எடுத்தநிலையில் அவுட்டானார். சிறிது நேரம் ரன்களே ஏறாத நிலையில் இந்த இருவரின் பார்ட்னர்ஷிப்பால் தென்ஆப்பிரிக்க அணி ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. தென்ஆப்பிரிக்க அணி 30 ஓவர்கள் வரைஇந்த ஜோடி பிரியாமல்இருந்தது. இதனால் விக்கெட்டுகளை இந்திய பவுலர்களால் எடுக்க முடியவில்லை. ஹெய்ன்ரிச் க்ளாசன் 30 ரன்கள் எடுத்தநிலையிலும், வெயின் பர்னெல் 16 ரன்களிலும், மகாராஜ் 5 ரன்களிலும் மளமளவென ஆட்டமிழந்தனர்.
கடந்த முதல் போட்டியில் அதிரடி காட்டிய தென்ஆப்பிரிக்கஅணி வீரர் டேவிட் மில்லர் 34 பந்துகளில் 35 ரன்களை எடுத்து அதிரடித்தார். 50 ஓவர்கள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்கு 279 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
india vs southafrica 2 nd odi india won
இந்திய பவுலர்கள்
முகமது சிராஜ் 10 ஓவர்கள் பந்துவீசி 38 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிரடித்தார். தீபக்சாஹருக்கு பதில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஒருவிக்கெட்எடுத்தார். சபாஷ் அகமது, குல்தீப்யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலாஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
india vs southafrica 2 nd odi india won
ஸ்ரேயாஸ் செஞ்சுரி அபாரம்
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் தவான் மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர். தவான் 20 பந்துகளில் ஒரே ஒரு சிக்ஸர் மட்டும் அடித்து 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அதற்குபின் இஷான்கிஷான் 3 வது ஆட்டக்காரராக களமிறங்கி கில்லுடன் ஜோடி சேர்ந்தார். 26பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 5 பவுண்டரிகளை விளாசிவிட்டு நடையைக் கட்டினார் கில். பின் இஷான் கிஷானுடன் ஜோடிசேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இஷான் கிஷான் செஞ்சுரிஅடிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் 84 பந்துகளில் 93 ரன்களை எடுத்த போது ரீஷா ஹெண்ட்ரிக்சிடம்கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினர். அதற்கு பின் ஸ்ரேயாஸ் ஐயரோடு சஞ்சு சாம்சன்ஜோடி சேர்ந்தார்.இந்த இருவரும் நிதானமாக விளையாடி பொறுமையாக ஸ்கோரை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் தன்னுடைய சதத்தினை பூர்த்தி செய்தார்.ஸ்ரேயாஸ் அய்யர் 111 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும்இவருடன் ஜோடிசேர்ந்தசஞ்சு சாம்சன் 36 பந்துகளை சந்தித்து 30ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.45.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளது.
இவ்விரு அணிகளுக்கிடையேயான கடைசி ஒரு நாள் போட்டியானது வரும் 11 ந்தேதியன்று டில்லியில் நடக்கிறது. இப்போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும். இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிடும் என்ற நம்பிக்கையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் எதிர்பார்ப்பை கேப்டன் ஷிகர் தவான் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.