ஷிகர் தவானின் அதிரடியால் இந்திய அணி 308 ரன்கள் குவிப்பு – வெற்றி பெறுமா வெஸ்ட் இண்டீஸ்!
India vs West Indies first oneday cricket match - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷிகர் தவான் (97), சுப்மான் கில் (64), ஸ்ரேயாஸ் அய்யர் (54) பொறுப்பான ஆட்டத்தால், இந்திய அணி நிர்ணயிக்கப்ப்டட 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய அணி நிர்ணயித்து உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி, டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
India vs West Indies first oneday cricket match - டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக மட்டுமல்லாது பொறுப்புடனும் ஆடினர். நிதான ஆட்டம் விளையாடிய வீரர்கள், 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், அல்ஜாரி ஜோசப், மோட்டி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு : ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது
India vs West Indies first oneday cricket match -வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவே முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அந்த அணிக்கு எதிரான கடைசி 11 ஒரு நாள் போட்டி தொடர்களை இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2006-ம் ஆண்டில் இந்தியாவை 4-1 என் ற கணக்கில் வென்று இருந்தது.
ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 136 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 67-ல் இந்தியாவும், 63-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன.