7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

இலங்கையில் நடைபெற்றுவரும் இந்திய , இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது.;

Update: 2021-07-18 18:15 GMT
இலங்கையில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றிப் பெற்றது.

வீரட்ஹோலி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற் கொண்டு உள்ளது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி டாசில் வெற்றிப் பெற்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது.

50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 262 ரன்களை எடுத்திருந்தது.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், தீபக் சஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள், குருணல் பாண்ட்யா மற்றும் ஹர்தீக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்திய அணி வெற்றி பெற 263 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது


தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினர். தவான் கேப்டன் என்ற நிலையில் நிதானமான ஆட்டத்தை தொடங்கினார்.

பிரித்வி ஷா தொடக்கம் முதலோ அதிரடியைக் காட்டினார்.24 பந்துகளில் 43 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து பர்ஸ்ட் டவுன் பேட்மேனாக இறங்கிய இஷான் கிஷன், தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலயே, முதல் பந்திலேயே சிக்ஸரை அடித்தார். 42 பந்துகளில் 59 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார்.

கேப்டன் தவானும் பொறுப்புடன் ஆடி தனது அரைசதத்தை நிறைவு செய்து, 86 ரன்களுடன் களத்தில் இருந்தார்.இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 263 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்று அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம இந்திய அணி ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Tags:    

Similar News