தொடர் யாருக்கு? கடைசி போட்டியில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதல்!
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி;
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்றிரவு நடைபெற இருக்கிறது. தொடரை வெல்ல இரு அணிகளும் இந்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும். இந்த நிலைமையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி எப்படி யுக்தி அமைக்கப் போகிறது. வெற்றியைத் தன்வசப்படுத்தப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
அமெரிக்காவில் இருக்கும் சென்ட்ரல் ப்ராவார்டு ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் இன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி துவங்க இருக்கிறது.
டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, இப்போது டி 20 தொடரில் ஆடி வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் பரிதாபமாக தோற்ற நிலையில், மூன்றாவது, நான்காவது போட்டிகளில் இந்திய அணி வெற்றியைத் தன் வசப்படுத்தியது. இதனால் கடைசி போட்டியை யார் வெல்வார்களோ அவர்களுக்கே கோப்பை என்பதால் இந்த போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஹர்டிக் பாண்டியா தலைமையிலான இந்த ஆட்டத்தில் அதே அணி இறங்குமா ஏதாவது மாற்றம் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இஷான் கிஷன், சுப்மன் கில் இருவருமே சரியான தொடக்கத்தை ஏற்படுத்தி தர முடியாமல் திணறி வந்தனர். ஆனால் நான்காவது போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் அதிரடி காட்டியுள்ளனர். எனவே அதே அணிதான் களமிறங்கும்.
மூன்றாவது போட்டியில் திலக் வர்மா 49 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 83 ரன்களும் எடுத்து அசத்தியிருந்தனர்.
டாஸ் வென்ற அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தேர்ந்தெடுப்பார் என்றே கணிக்கப்படுகிறது.
இந்தியா அணி வீரர்கள்
இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல்(கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், அகில் ஹோசைன், அல்ஜாரி ஜோசப், ஓபெட் மெக்காய்.
டிடி ஸ்போர்ட்ஸ் , ஜியோ சினிமா உள்ளிட்ட தளங்களில் நாம் கிரிக்கெட் போட்டியை நேரலையில் கண்டு மகிழலாம்.