கூண்டோடு மாற்றப்படும் இந்திய அணி! இந்த ஆட்டத்தில் வெற்றி பெற சூப்பர் ப்ளான்!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெல்லும் முனைப்போடு களமிறங்குகிறது இந்திய அணி.;

Update: 2023-08-08 04:48 GMT

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான 3வது டி20 போட்டி இன்றிரவு நடைபெற இருக்கிறது. தொடரை வெல்ல எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டும். இந்த நிலைமையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி எப்படி யுக்தி அமைக்கப் போகிறது. வெற்றியைத் தன்வசப்படுத்தப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

கயானாவில் இருக்கும் பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இன்று இந்திய நேரப்படும் இரவு 8 மணிக்கு இந்த போட்டி துவங்க இருக்கிறது.

டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, இப்போது டி 20 தொடரில் ஆடி வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் பரிதாபமாக தோற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் எப்படியும் வென்றாக வேண்டும் என்ற நோக்குடன் களமிறங்கவுள்ளது.

ஹர்டிக் பாண்டியா தலைமையிலான இந்த ஆட்டத்தில் அதே அணி இறங்குமா ஏதாவது மாற்றம் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இஷான் கிஷன், சுப்மன் கில் இருவருமே சரியான தொடக்கத்தை ஏற்படுத்தி தர முடியாமல் திணறி வருகின்றனர்.

திலக் வர்மா மட்டுமே சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். சூர்ய குமார் யாதவ் எதற்கு அணியில் இருக்கிறார் என்பது கூட தெரியாமல் ஆடி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்கலாம்.

டாஸ் வென்ற அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தேர்ந்தெடுப்பார் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அணி வீரர்கள்

இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்

பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல்(கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், அகில் ஹோசைன், அல்ஜாரி ஜோசப், ஓபெட் மெக்காய்.

டிடி ஸ்போர்ட்ஸ் , ஜியோ சினிமா உள்ளிட்ட தளங்களில் நாம் கிரிக்கெட் போட்டியை நேரலையில் கண்டு மகிழலாம். 

Tags:    

Similar News