இந்தியா Vs ஆஸ்திரேலியா - சொந்த மண்ணில் வெற்றிக்கொடி நாட்டும் முனைப்பில் நீலப்படை!
இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது ஆஸ்திரேலியா;
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் துவங்க இருக்கிறது. முதல் போட்டி மகராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடக்கவுள்ளது.
இந்தியாவுடன் மோதும் ஆஸ்திரேலியா
டெஸ்ட் ரேங்கிங் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியுடன் மோத காத்திருக்கிறது. 29 ஆட்டங்களில் ஆடியுள்ள ஆஸ்திரேலிய அணி 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி 115 புள்ளிகள் அடிப்படையில் இருக்கிறது. இந்த தொடரில் 3-1 அல்லது 4-0 எனும் கணக்கில் மொத்த ஆட்டங்களையும் வென்றால் இந்திய அணி முதல் இடத்தைப் பிடிக்க மிகப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை
வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் போட்டி மகராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி தரம்சாலாவிலும் மூன்றாவது போட்டி டெல்லியிலும் கடைசி போட்டி அகமதாபாத்திலும் நடைபெற இருக்கிறது.
உள்ளே வெளியே - In and Out
விபத்தில் காயம் அடைந்துள்ள ரிஷப் பந்த் இந்த ஆண்டு முழுவதும் எந்த போட்டியிலும் விளையாடமாட்டார் என்றிருக்கிறார்கள். இதனால் இந்த போட்டித் தொடரிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார்.
முதுகில் காயம் ஏற்பட்ட பும்ரா முதல் 2 போட்டிகளில் விளையாட மாட்டார்.
முழங்காலில் காயம் ஏற்பட்டிருந்த ஜடேஜா காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்திருப்பதாகவே தெரிகிறது. இதனால் போட்டியில் கண்டிப்பாக அவருக்கு இடம் இருக்கும் என கூறப்படுகிறது.
பகை சொல்லும் செய்தி
இதுவரை ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகின்றன. கடைசியாக 2004ம் ஆண்டு ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிதான் இந்திய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியிருந்தது.
கடைசியாக இந்திய மண்ணில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியுடனேயே நாடு திரும்பியது.
போட்டி அட்டவணை
இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் முழு அட்டவணை
முதல் டெஸ்ட் போட்டி:
தேதி: Feb 09, Thu - Feb 13, Mona
இடம்: Vidarbha Cricket Association Stadium, Nagpur
நேரம்: 9:30 AM IST.
2வது டெஸ்ட் போட்டி:
தேதி: Feb 17, Fri - Feb 21, Tue
இடம்: Arun Jaitley Stadium, Delhi
நேரம்: 9:30 AM IST
3வது டெஸ்ட் போட்டி:
தேதி: Mar 01, Wed - Mar 05, Sun
இடம்: Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala
நேரம்: 9:30 AM IST
4வது டெஸ்ட் போட்டி:
தேதி: Mar 09, Thu - Mar 13, Mon
இடம்: Narendra Modi Stadium, Ahmedabad
நேரம்: 9:30 AM IST
அணிகள் Squads:
இந்தியா (முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள்): ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பாரத் (Wk), இஷான் கிஷன் (Wk), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.
India (first two Tests): Rohit Sharma (Captain), KL Rahul (vice-captain), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, KS Bharat (wk), Ishan Kishan (wk), R. Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Ravindra Jadeja, Mohammad Shami, Mohammed Siraj, Umesh Yadav, Jaydev Unadkat, Suryakumar Yadav.
ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (வாரம்), கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.
Australia: Pat Cummins (Captain), Ashton Agar, Scott Boland, Alex Carey (wk), Cameron Green, Josh Hazlewood, Peter Handscomb, Travis Head, Usman Khawaja, Marnus Labuschagne, Nathan Lyon, Lance Morris, Todd Murphy, Matthew Renshaw, Steve Smith, Mitchell Starc, Mitchell Swepson, David Warner