Women's t20 world cup அயர்லாந்து அணியை வென்றது இந்தியா!

இன்று நடைபெறும் பாகிஸ்தான் - இங்கிலாந்து ஆட்டத்தில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஜெயித்தாலோ, தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஜெயித்தாலோ மட்டும் அரையிறுதி ஆட்டங்களில் மாற்றம் இருக்கும்.;

Update: 2023-02-21 02:29 GMT

ஐசிசி பெண்கள் டி20 உலக கோப்பைப் போட்டித் தொடரில் இந்திய அணி நேற்று அயர்லாந்து அணியை எதிர் கொண்டு வென்ற நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பி பிரிவில் பங்கேற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் முதல் பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. மேலும் இலங்கை அல்லது தென்னாப்பிரிக்க அணியும் அவர்களுடன் செல்ல வாய்ப்பு பிரகாசம்.

பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா 2 வெற்றிகளுடன் முதல் இரு இடங்களைப் பிடித்திருந்தன. கடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இந்திய அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

ஏற்கனவே பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளை வென்று அந்த வெற்றியோடு களமிறங்கி இங்கிலாந்திடம் வீழ்ந்தது இந்திய அணி. இங்கிலாந்து அணியும் மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகளை வென்றிருந்தது. இந்திய அணியையும் வென்று 3 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு சென்றது.

தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழையின் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணி அரையிறுதி செல்வது இது 5வது முறையாகும். இன்று நடைபெறும் பாகிஸ்தான் - இங்கிலாந்து ஆட்டத்தில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஜெயித்தாலோ, தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஜெயித்தாலோ மட்டும் அரையிறுதி ஆட்டங்களில் மாற்றம் இருக்கும். இல்லையென்றால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியையும், இங்கிலாந்து அணி நியூசிலாந்தி அணியையும் எதிர் கொள்ளும்.

இந்திய அணி விவரம் India Squad:

Harmanpreet Kaur (c), Smriti Mandhana (vc), Yastika Bhatia, Harleen Deol, Rajeshwari Gayakwad, Richa Ghosh, Shikha Pandey, Jemimah Rodrigues, Anjali Sarvani, Deepti Sharma, Renuka Singh, Devika Vaidya, Pooja Vastrakar, Shafali Verma, Radha Yadav.

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (து.கேப்டன்), யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், ராஜேஸ்வரி கயக்வாட், ரிச்சா கோஷ், ஷிகா பாண்டே, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அஞ்சலி சர்வானி, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், தேவிகா வைத்யா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாத் வர்மா, ஷஃபாலி வர்மா

Tags:    

Similar News