குஜராத் Vs சென்னை! முதல் ஆட்டத்திலேயே பழி தீர்க்குமா சிஎஸ்கே!
குஜராத்துடன் இதுவரை இரண்டு முறை மோதியுள்ள சென்னை அணி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது.;
குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கடந்த சீசனின் கடைசி ஆட்டத்தில் தோற்றதற்கு பழிக்கு பழி வாங்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கவுள்ள 2023 ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் குஜராத்துடன் மோதுகிறது சென்னை.
ஐபிஎல் 2022ம் ஆண்டு தான் முதன்முதலில் ஐபிஎல் தொடரில் விளையாடியது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதல் தொடரிலேயே கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. இதனால் அந்த அணி இந்த ஆண்டும் மிக பலத்துடன் இருப்பதாக கருதப்படுகிறது. முதல் ஆட்டத்திலேயே சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது குஜராத்.
இம்முறை மிகவும் பலமாக சென்னை அணி களமிறங்க காத்திருக்கிறது. தீபக் சாஹர் உள்ளிட்ட சில வீரர்கள் அணிக்கு திரும்பியிருக்கின்றனர். கேப்டன் தோனியின் கடைசி தொடராக இது இருக்கும் என்றும் கூறப்படுவதால், இந்த தொடரைக் கட்டாயமாக கைப்பற்றிவிட வேண்டும் என சென்னை அணி வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள்.
குஜராத் அணியும் தொடக்கம் முதலே தங்களது ஆதிக்கத்தை காட்டி விளையாட நினைக்கும். அந்த அணி கட்டாயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று தாங்கள் அதே வலுவுடன்தான் இருக்கிறோம் என்பதைக் காட்ட முயலும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் இதுவரை
குஜராத்துடன் இதுவரை இரண்டு முறை மோதியுள்ள சென்னை அணி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது.
இரண்டு ஆட்டங்களிலும் கடைசி ஓவர் வரை திரில்லாக சென்று போராடி தோற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதல் ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் Vs குஜராத் டைட்டன்ஸ்
நாள் - 31 மார்ச் 2023
நேரம் - இரவு 8 மணி
இடம் - நரேந்திர மோடி ஸ்டேடியம்
அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்
கோப்பையை வெல்லுமா சிஎஸ்கே அணி?
ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான அணிகளுள் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஒரு சில சீசன்கள் தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் வெளுத்து வாங்கியுள்ள சிஎஸ்கே, இதுவரை நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2010, 2011, 2018, 2021 ஆண்டுகளில் தோனி தலைமையில் கோப்பைகளை கைப்பற்றியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியல்
MS Dhoni, Ravindra Jadeja, Devon Conway, Ruturaj Gaikwad, Ambati Rayudu, Subhranshu Senapati, Moeen Ali, Shivam Dube, Rajvardhan Hangargekar, Dwaine Pretorius, Mitchell Santner, Deepak Chahar, Tushar Deshpande, Mukesh Choudhary, Matheesha Pathirana, Simarjeet Singh, Prashant Solanki, Maheesh Theekshana, Ajinkya Rahane, Ben Stokes, Shaik Rasheed, Nishant Sindhu, Kyle Jamieson, Ajay Mandal, Bhagath Varma
எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சிம்மத் சௌத்ரி, முகேஷ் சிம்மத் சௌத்ரி, , மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா
குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் பட்டியல்
Hardik pandya,Shubman Gill,David Miller,Wriddhiman Saha,Matthew Wade,Abhinav Manohar,Sai Sudarshan,Rahul Tewatia,Rashid Khan,VijayShankar,R Sai Kishore,Jayant Yadav,Mohammad Shami,Alzarri Joseph,Yash Dayal,Noor Ahmad,Darshan Nalkande,Pradeep Sangwan
ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில், டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், அபினவ் மனோகர், சாய் சுதர்ஷன், ராகுல் தெவாடியா, ரஷித் கான், விஜய் சங்கர், ஆர் சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், நூர் அகமது, நல்கண்டே, பிரதீப் சங்வான்