குஜராத்திடம் படுதோல்வியடைந்த லக்னோ!

குஜராத் அணி இறுதியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2023-05-07 13:45 GMT

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்ய வந்தது.

குஜராத் அணியின் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் விருதிமான் சஹா இருவரும் களமிறங்கினர். இருவரும் லக்னோ அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். நாலாபுறமும் பந்துகள் எல்லைக் கோட்டைத் தாண்டி பறந்தன. சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொண்டே சென்றன. இடையிடையில் 1, 2 ரன்களை ஓடி எடுத்தனர் வீரர்கள்.

43 பந்துகளைச் சந்தித்திருந்து விருதிமான சஹா 81 ரன்களில் அவுட் ஆனார். அவரின் விக்கெட்டைக் கைப்பற்றி ஆவேஷ் கான் லக்னோ அணிக்கு கொஞ்சம் நம்பிக்கை அளித்தார். இந்த நம்பிக்கை கொஞ்ச நேரம் கூட நிற்கவில்லை.

அடுத்து சுப்மன் கில்லுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து டேவிட் மில்லர் களமிறங்கினார். அவர் 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். சுப்மன் கில்லும் தன் பங்குக்கு 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என விளாசி 20 ஓவர்களில் 227 ரன்களைத் தொட குஜராத் அணிக்கு காரணமாக இருந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 228 ரன்கள் இலக்கை நோக்கி ஆடினாலும், மேயர்ஸ், டி காக் தவிர மற்ற யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. குயின்டன் டிகாக் 41 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அவரைத் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக 20 ஓவர்களில் லக்னோ அணியால் 171 ரன்களே எடுக்க முடிந்தது.

குஜராத் அணி இறுதியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Tags:    

Similar News