பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் போபண்ணா மிட்டெல்கூப் ஜோடி
French Open Tennis 2022: விம்பிள்டன் சாம்பியனை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த போபண்ணா மிட்டெல்கூப் ஜோடி;
கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- மேத்வி மிட்டெல்கூப் (நெதர்லாந்து) ஜோடி விம்பிள்டன் சாம்பியனான குரோஷியாவின் மேட்பவிச்- நிகோல் மெக்டிச் ஜோடியை 6-7 (5-7), 7-6(7-3), 7-6 (12-10) என்ற செட் கணக்கில் வென்றது.
இதன் மூலம் போபண்ணா- மிட்டெல்கூப் கால்இறுதிக்குள் நுழைந்தது.
போட்டியின் போது எதிரணியின் 5 மேட்ச் பாயிண்ட்களை முறியடித்த போபண்ணா- மிட்டெல்கூப் ஜோடி, இந்த வெற்றிக்காக 2 மணி 32 நிமிடங்கள் போராடியது.