டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டம் மழையால் ரத்து

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கிய டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

Update: 2021-07-20 02:23 GMT

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கிய டிஎன்பில் போட்டியில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டம் தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் விதமாக மாவட்டங்களுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. 5வது சீசன் கிரிக்கொட் போட்டி நேற்று தொடங்கியது.


இதில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் என 8 அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகள் அனைத்து லீக், பிளேஆப் சுற்று மற்றும்  நாக்அவுட் முறையில் நடைபெறுகிறது.

நேற்று போட்டிகள் தொடங்கியது. போட்டிகள் அனைத்து சென்னை சேப்பாகம் மைதானத்தில் மட்டுமே நடைபெறுகிது.

முதல் போட்டி லைகா கோவை கிங்ஸ் அணிக்கும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. சேலம் அணி டாசில் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.


 



கோவை அணியின் துவக்க ஆட்டக்கார்கள் களம் இறங்கினர் இதில் கங்கா ஸ்ரீதர் ராஜு அதிரடியாக ஆடி 33 ரன்கள் குவித்து, கணேஷ் மூர்த்தி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்பு கவின்-சாய் சுதர்சன் இணை நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடி அணியின் ஸ்கோரை அதிகப்படுததினர். சாய் சுதர்சன், 87 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக கவின் 33 ரன்களிலும், கேப்டன் ஷாருக்கான் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். முகிலேஷும் ஒரு ரன் மட்டுமே எடுத்து, ரன்அவுட் ஆனார்.

18 ஓவர் முடிவில் கோவை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து தொடர்ந்து மழை பெய்தமையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு கோவை மற்றும் சேலம் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இரண்டாவது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ஐ டிரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகிறது.

Tags:    

Similar News