22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மல்லுகட்டுகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதி யுத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும். இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றதால் வெற்றி பெறும் அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும்.ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. 23 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்ஸி கோலடித்து அர்ஜென்டினாவை முன்னிலை வகிக்க வைத்தார். இந்த கோலின் மூலம் குழு நிலை, 16வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி என அனைத்து நிலைகளிலும் கோல் அடித்து உலக சாதனை படைத்தார் மெஸ்சி35 வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா அடுத்த கோல் அடிக்க அர்ஜென்டினா 2-0 என முன்னிலை பெற்றது. 2022 கத்தார் உலகக் கோப்பையில் அர்ஜென்டினா 2-0 என முன்னிலை பெற்றிருப்பது இது 6வது முறையாகும்.அடுத்தடுத்த அதிரடியால் ஆட்டத்தின் போக்கே மாறியது. எம்பாப்பே 80 நிமிடத்தில் பெனால்டி கோல் அடித்து அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் இரண்டாவது கோல் அடித்தார்அர்ஜென்டினாவின் 2-0 முன்னிலையை எம்பாப்பே தகர்க்க 97 வினாடிகள் எடுத்தது. பிரான்சில் இருந்து என்ன ஒரு அற்புதமான மறுபிரவேசம்.ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போட முயற்சித்தாலும் அது நடக்கவில்லை. 108வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, 118வது நிமிடத்தில் எம்பாப்பே கோலடித்து சமனாக்கினார் கூடுதல் நேர முடிவில் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட் அவுட் கொண்டுவரப்பட்டதுஅர்ஜென்டினா பெனால்டி ஷூட்அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது!இந்த இறுதி போட்டியில் வென்றதன் மூலம் 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்று அர்ஜென்டினா சாதனை படைத்தது. அர்ஜென்டினாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையை தனது தோளில் சுமந்த 35 வயதான மெஸ்சிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாகும்.36 ஆண்டுகளுக்கு கால்பந்து சாம்பியனானது அர்ஜென்டினா, 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தினார், ஆனால் கடவுள் கைகளால் அல்ல, தனது கால்களால்.