ஓவல் டெஸ்ட்: தாக்குப்பிடிக்குமா இந்தியா?

முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் ரன்கள் பின்தங்கிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்தால் மட்டுமே தோல்வியை தவிர்க்க முடியும்

Update: 2021-09-04 01:39 GMT

ஓவல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடும் ரோஹித் மற்றும் ராகுல்

லண்டன் ஓவல் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இங்கிலாந்து 80 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலை பெற்று முதல் இன்னிங்ஸை முடித்தது. உமேஷ் யாதவ் - 3 பும்ரா - 2 தாகூர் - 1 ; சிராஜ் - 1 ஜடேஜா - 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் 20 ரன்களுடனும் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா அதிக ரன்கள் எடுத்தால் மட்டுமே தோல்வியிலிருந்து தப்ப முடியும்.

Tags:    

Similar News