பேர்ஸ்டோ அதிரடி : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து
ENG VS NZ Test Match -நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது;
வெற்றி பெற்ற உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் பேர்ஸ்டோ
ENG VS NZ Test Match - நாட்டிங்காமில் நடைபெற்ற இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியில் ஒல்லி போப், ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். ஒல்லி போப் 145 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் 176 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடியது . இன்றைய 5வது நாள் தொடக்கத்தில் ,சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் 62 ரன்களும் ,வில் யங் 56 ரன்களும் ,டேவான் கான்வே 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இங்கிலாந்து சார்பில் பிராட்,3 விக்கெட்டும்,ஆண்டர்சன் ,போட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது .
இன்று கடைசி நாள் என்பதால் அந்த இந்த போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது . இந்த நிலையில் தனது இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது .பின்னர் வந்த பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டார் . அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 77 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் .மறுபுறம் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்தார்
தொடர்ந்து விளையாடிய பேர்ஸ்டோ அவர் 136 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு ஸ்டோக்ஸ் அதிரடி காட்டினார் .இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது .ஸ்டோக்ஸ் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் .
இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என தொடரை வென்றது .
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2