DC vs GT குஜராத் டைட்டன்ஸ் அதிர்ச்சி தோல்வி! டெல்லியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது!
ஹர்திக் பாண்டியா 53 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 7 பந்துகளில் 20 ரன்கள் குவித்து ராகுல் தெவாட்டியா மிகப்பெரிய கவனத்தைத் தன்மீது திருப்பினார். இருந்தாலும் 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.;
ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனால் அந்த அணியின் துவக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னரும், விக்கெட் கீப்பர் பில் சால்ட்டும் களமிறங்கினர்.
முதல் ஓவரின் முதல் பந்திலேயே பில்ட் அவுட் ஆகி வெளியேற, இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் டேவிட் வார்னர் நடையைக் கட்டினார். அடுத்து முகமது சமி வீசிய ஓவரில் பிரியம் கர்க், ரோஸ்ஸவ், மணிஷ் பாண்டே என அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற டெல்லி அணி 5 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து 23 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கினார் அக்ஷார் படேல். அவருடன் ஜோடி சேர்ந்தார் அமன் கான். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு கொண்டு வந்தனர். முக்கியமாக அமன் கான் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 44 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அக்ஷார் படேல் 30 பந்துகளில் 27 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
அடுத்து ரிபல் படேல் மட்டும் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளையும், மொகித் சர்மா 2 விக்கெட்டுகளையும் ரஷீத் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி. அந்த அணியின் விருதிமான் சஹா, சுப்மன் கில் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். முதல் ஓவரில் சஹா விக்கெட்டையும், 4 வது ஓவரில் கில் விக்கெட்டையும் இழந்தது குஜராத் அணி. அப்போது 2 விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, அபினவ், ராகுல் தெவாட்டியா தவிர மற்ற யாரும் இரட்டை இலக்க ரன்களையே தொடவில்லை.
ஹர்திக் பாண்டியா 53 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 7 பந்துகளில் 20 ரன்கள் குவித்து ராகுல் தெவாட்டியா மிகப்பெரிய கவனத்தைத் தன்மீது திருப்பினார். இருந்தாலும் 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.
கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் அன்ரிச் நோர்க்யா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.