DC vs SRH கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி அணி!

இரண்டாவது வெற்றியை ருசித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி! 7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது;

Update: 2023-04-24 17:46 GMT

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், பில் சால்ட் ஆகியோர் நல்ல துவக்கத்தைத் தர தவறினர்.

கேப்டன் டேவிட் வார்னருடன் களமிறங்கிய சால்ட், டக் அவுட் ஆகி வெளியேறினார்.

பில் சால்ட் 0 (1)

புவனேஷ்வர்குமார் ஓவரில் ஹென்ரிச் கையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

வார்னருடன் சேர்ந்து ரன்களைக் குவிக்க அடுத்ததாக களமிறங்கியவர் மிட்சல் மார்ஷ். இருவரும் நிதானமாக ஆடினர்.

மிட்சல் மார்ஷ் 25 (15)

நடராஜன் வீசிய ஓவரில் எல்பிடவுள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.

டேவிட் வார்னர் 21 (20)

வாஷிங்டன் சுந்தர் ஓவரில் ஹேரி ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த களமிறங்கிய வீரர்கள் அக்ஷர் படேல் 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். மனிஷ் பாண்டே 27 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அவர்கள் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

துவக்க வீரரான ப்ரூக் 14 பந்துகளில் 7 ரன்களில் அவுட் ஆக, ராகுல் திரிபாதி களமிறங்கினார். அவர் மயாங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து அடித்தார். மயாங்க் அகர்வால் 49 ரன்களில் அவுட் ஆக, அடுத்து அபிஷேக் சர்மா 5 ரன்களுக்கும், மார்க்ரம் 3 ரன்களுக்கும் அவுட் ஆக டெல்லி அணியின் வெற்றி தொலைவு நோக்கி சென்றுகொண்டிருந்தது.

ஆனால் அதற்கு பிறகு வந்த க்ளாஸன் அதிரடியாக 19 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தரும் கடைசி வரை போராடினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது. 

இதன்மூலம் இரண்டாவது வெற்றியை ருசித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி! 7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது

Tags:    

Similar News