CSK vs PBKS பஞ்சாப் அணி திரில் வெற்றி!
கடைசி பந்தில் 3 ரன்கள் ஓடி பஞ்சாப் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் சிக்கந்தர் ராசா;
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் துவக்க வீரர்களாக களமிறங்கினர் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே. இருவரும் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினர். பெரிய அளவில் சிக்ஸர்கள் பறக்கவில்லை என்றாலும் பவுண்டரிகள் எக்கச்சக்கமாக பறந்தது.
ருத்துராஜ் 31 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருக்கு பிறகு கான்வேயுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். அவரும் தனது பங்குக்கு 2 சிக்ஸர்களை பறக்க விட்டு 17 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அவருக்குப் பிறகு வந்த மொயின் அலி 6 பந்துகளில் 10 ரன்களை எடுத்தார். அடுத்து ரவீந்திர ஜடேஜா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இப்படி 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியில் தோனியின் 2 சிக்ஸர்களால் 20 ஓவர்களுக்கு 200 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது சென்னை.
16 பவுண்டரிகளையும் விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார் டெவான் கான்வே. அவர் 52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்திருந்தார்.
பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது பஞ்சாப் அணி