CSK vs MI மும்பைக்கு எதிராக சென்னை மோதும் ஆட்டம் ரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆட்டம் ரத்து செய்யப்படும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-05-05 16:47 GMT

சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆட்டம் ரத்து செய்யப்படும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் அங்கு மழை பெய்து வருவதும் மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதும்தான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்தான் ஐபிஎல்லின் மிகப் பெரிய பகையாளிகள். இருவரும் சம அளவிலான பலம் மிக்க அணியாக இருப்பினும் ஐபிஎல் 2023 தொடரின் ஆரம்பக் கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சரியாக விளையாடாமல் அடுத்தடுத்து சில தோல்விகளைப் பெற்றது. ஆனால் சரியான நேரத்தில் பாஃமுக்கி திரும்பிய அந்த அணி வீரர்களால் இப்போது பலம் வாய்ந்த அணியாகியுள்ளது. ஆனால் மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பலம் வாய்ந்த அணியாக இருந்து இப்போது கொஞ்சம் திணறும் அணியாக மாறி வருகிறது.

இதனால் இரு அணிகளும் நாளை மோதும்போது வெற்றி பெறுவது யார் என்பதை எதிர்பார்த்து மக்கள் இருக்கிறார்கள். ரசிகர்களும் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்று 5வது முறையாக சாம்பியனாகும் என்று கணித்து வருகின்றனர்.

மும்பை - சென்னை ஆட்டம் எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறும். இந்த முறையும் அப்படி எதிர்பார்ப்பு கிளம்பியிருப்பதால், போட்டி டிக்கெட் மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் நள்ளிரவு முதலே வரிசையில் நின்று காலையில் டிக்கெட் வாங்கி சென்றார்கள் ரசிகர்கள்.

ஆன்லைனில் டிக்கெட் விற்கத் துவங்கி 10 நிமிடங்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

ஆனால் இவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மழை அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை அணிக்கு ஆபத்தானதாக முடிவு மாறுகிறது.

ஏனெனில் ஏற்கனவே போட்டி ரத்தானதால் 1 புள்ளியைப் பெற்றிருக்கிறது. இப்போது மீண்டும் 1 புள்ளியைப் பெற்றால் அடுத்து 3 போட்டிகளையும் வென்றாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணியின் ப்ளே ஆஃப் தகுதி கேள்விக்குறியாகும்.

ஒருவேளை மழை இன்றி ஆட்டம் நடைபெற்றால் மும்பை அணி டாஸ் வென்று பவுலிங்கையேத் தேர்வு செய்யும். சென்னை அணியாக இருந்தாலும் அதே முடிவைத் தான் எடுக்கும். இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News