கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கு ஊதியத்தில் 10% அபராதம்: பிசிசிஐ அதிரடி

Virat Kohli punished for violating IPL code - ஆர்சிபி அணியின் விராட் கோஹ்லிக்கு ஊதியத்தில் 10 சதவீதத்தை அபராதமாக விதித்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

Update: 2023-04-18 09:24 GMT
விளையாட்டின்போது ஆக்ரோஷத்துடன் விராட் கோஹ்லி.

Virat Kohli punished for violating IPL code - நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 24 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.


Virat Kohli fined 10% of match fee by BCCI

இதனிடையே முதலில் டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னைசூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணிக்கு 227 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 227 ரன்கள் இலக்காக வைத்து களமிறங்கிய பெங்களூரு அணி முதல் ஓவரிலேயே தடுமாறியது. விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாகி வெளியேறினார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

IPL 2023, Breaching Code Of Conduct During RCB vs CSK Match

அடுத்து வந்த மஹிபால் டக் அவுட்டில் வீழ்ந்தார். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல்லும், டுபிளிசிஸ்சும் கூட்டணி அமைத்து பந்தை நாலாபுறமும் பறக்க விட்டனர். 8.2 ஓவர்களி 100 ரன்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பெங்களூர் அணி 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 141 ரன்களை குவித்தது. இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, மேக்ஸ் வெல்லின் கேட்சை தோனி சூப்பராக பிடிக்க, அடுத்த ஓவரிலேயே டுபிளிசிஸ் அவுட் ஆனார். தினேஷ் கார்த்திக், ஷபாஸ் அகமது உள்ளிட்ட வீரர்கள் சோபிக்காமல் போக, இறுதி ஓவரில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி ஆட்டத்தை கைப்பற்றி வென்றது.

இந்நிலையில் போட்டியில் விராட் கோலியின் ஆக்ரோஷம் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே இருந்து வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் மற்றும் சிவம் துபே ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்த போது, விராட் கோலி கத்திக் கூச்சலிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் 6 ரன்களில் அவுட் ஆன கோலி, மேக்ஸ்வெல் சிக்ஸர் அடித்த போதெல்லாம் தன்னை மறந்து உற்சாகக் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். ஆனால் இவரின் இந்த செயலுக்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Code of Conduct Breach – April 17 – RCB vs CSK

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஐபிஎல் 2023 தொடரில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி மோதிய போட்டியில் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி, ஐபிஎல் விதிமுறைகளில் ஒன்றான ஆர்டிக்கள் 2.2 விதிமுறையை மீறியிருக்கிறார். அதன் விளைவாக விராட் கோஹ்லிக்கு அவரது ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த வெளியீடு கோஹ்லியின் நடத்தை விதிகளை மீறிய சம்பவம் பற்றி எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. இருப்பினும் சென்னை அணியின் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே வெளியேற்றப்பட்ட பிறகு கோஹ்லியின் ஆக்ரோஷமான கொண்டாட்டம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News