கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் தம்பதிக்கு இரட்டை குழந்தை
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் தம்பதிக்கு இன்று இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.;
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. பிறந்த உடனே அவர்களுக்கு பெயரையும் வைத்துவிட்டனர்.
இவர்களுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தீபிகாவும் நானும் இரண்டு அழகான ஆண் குழந்தைகளைப் பெற்றுள்ளோம்' என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவரது மனைவி தீபிகா பல்லிகல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கபீர் பள்ளிகல் கார்த்திக் மற்றும் ஜியான் பள்ளிகல் கார்த்திக் ஆகிய இரண்டு அழகான ஆண் குழந்தைகளைப் பெற்றதில் நானும் தினேஷ்கார்த்திக்கும் மிகவும் பணிவுடன் இருக்கிறோம். ஆனால் எங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.