அடர்ந்த காட்டுக்கு ரகசியமாக செல்லும் கிரிக்கெட் வீரர் தோனி..!

கிரிக்கெட் வீரர் தோனி, மூட்டு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக, அடர்ந்த காட்டுப் பகுதிக்கு மருத்துவரை ரகசியமாக தேடிச் செல்லும் தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2022-07-02 08:36 GMT

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி.

பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்கு கடுமையான மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் 40 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை செய்து வருகிறார். தோனிக்கு கால்சியம் குறைபாடு காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆயுர்வேத மருத்துவ முறையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் வசித்து வரும் தோனி, அங்கிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு செல்கிறார். அங்கு லாபுங் என்ற கிராமப் பகுதியில் வசிக்கும் வந்தன் சிங் கேர்வார் என்ற ஆயுர்வேத மருத்துவரை அடிக்கடி சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்று வருகிறார். ஆயுர்வேத மருத்துவர் வந்தன்சிங், தோனியின் பெற்றோருக்கும் சிகிச்சை அளித்து குணப்படுத்தியவர்.

இதையடுத்து பெற்றோர் அறிவுரையின்படியே, கடந்த ஒரு மாதமாக இந்த மருத்துவரிடம் தோனி சிகிச்சை பெறுகிறார். அத்துடன் இந்த சிகிச்சைக்காக அந்த ஆயுர்வேத மருத்துவரிடம் தோனி செலுத்திய கட்டணம் வெறும் 40 ரூபாய் என்பது தான் ஆச்சரிய தகவல். இப்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், கிராமப்புற ஆயுர்வேத மருத்துவரை தேடி நாளுக்கு நாள் நோயாளிகள் கூட்டம் அதிகமாக குவிவதுதான் சுவாரசியமான விஷயம்.

Tags:    

Similar News