உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கையை எளிதாக வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை எளிதாக வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.;

Update: 2023-11-09 14:33 GMT

இலங்கையை வீழ்த்தி பெற்றி பெற்ற மகிழ்ச்சியில்  நியூசிலாந்து அணி பேட்ஸ்மென்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கையை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியானது டெல்லி, பெங்களூரு, லக்னோ, சென்னை, மும்பை , தர்மசாலா, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ,ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உட்பட மொத்தம் பத்து அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன, இந்திய அணியானது இதுவரை சந்தித்த 8 போட்டிகளில் அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லீக் போட்டியில் இறுதியாக இந்திய அணியானது நவம்பர் 12ஆம் தேதி நெதர்லாந்து அணியுடன் மோத இருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் இந்தியா அரையிறுதி போட்டிக்கு ஏற்கனவே முன்னேறி உள்ளதால் பிரச்சனை இல்லை. அதை போல் தென் ஆப்பிரிக்கா அணியும் ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று முன்னாள் உலக கோப்பை சாம்பியன் இலங்கை அணியானது நியூசிலாந்து அணியை சந்தித்தது. இந்த போட்டியில் இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. 171 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இலங்கை அணி. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி பந்தடிக்க தொடங்கியது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீரர்கள் களம் இறங்கினார்கள். நியூசிலாந்து அணியினரின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் அவர்கள் 23.2 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டினார்கள். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணிக்கு அரை இறுதி போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனாலும் இன்னும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு இருப்பதால் அடுத்தடுத்து நடைபெறக்கூடிய லீக் போட்டிகளில் யார் அதிக புள்ளிகள் எடுக்கிறார்களோ அவர்களுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News