உலக கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.;

Update: 2023-11-03 14:51 GMT

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உட்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டும். இந்த லீக் தொடரில் முதல் 4 இடங்களை பெறும் பணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி வரும். அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பது இந்த விளையாட்டின் விதிமுறை ஆகும்.

அந்த வகையில் இந்தியா இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில்  உள்ளது.. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது.

இந்நிலையில் இன்று உத்தரபிரதேச மாநிலம்  லக்னோ மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நெதர்லாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்  செய்தது. ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் வேகப்பந்துகளை தாக்கு பிடிக்க முடியாமல் நெதர்லாந்து அணி வீரர்களின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்து கொண்டே இருந்தன. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 31.3 ஓவர்களில் இலக்கை தாண்டியது.இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News