உலக கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானிடம் அடங்கியது இங்கிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.;

Update: 2023-10-15 16:21 GMT

இங்கிலாந்தை வீழ்த்திய வெற்றிக்களிப்பில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு இந்தியா சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உட்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற ஒன்பது அணிகளுடன் மோத வேண்டும். இந்த அணிகள் எடுக்கும் புள்ளிகளின் அடிப்படையில் அரை இறுதி போட்டிக்கு நான்கு அணிகள் தேர்வு செய்யப்படும். அதில் வெற்றி பெறும் தலா ஒரு அணி இறுதிப் போட்டியில் பங்குபெறும்.

இந்த உலக கோப்பை போட்டியானது குஜராத் மாநிலத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியை பொறுத்தவரை இந்தியா இதுவரை மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து  அணி உள்ளது.அதற்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும் உள்ளன. 

இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் மோதின. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்தடிக்க தொடங்கியது. அந்த அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  284 ரன்கள் எடுத்திருந்தது. 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்துக்கு ஆப்கானிஸ்தான் நிர்ணயம் செய்தது.

இங்கிலாந்து  வீரர்கள் களமிறங்கி ஆடத் தொடங்கினார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்களின் வேக பந்து மற்றும்  சுழற் பந்துகளை தாங்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் வரிசையாக ஆட்டம் இழக்க தொடங்கினார்கள். இங்கிலாந்தில் எந்த ஒரு வீரரும் சோபிக்கவில்லை குறைந்த ரன்களிலேயே அவுட் ஆகி வெளியே சென்றார்கள். இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் ஆட்டம் ஈடுபடவில்லை.

இறுதியாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி சிறிய அணியான ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் வெற்றியாகும். ஏற்கனவே அந்த அணியானது பாகிஸ்தானிடமும், இந்தியாவிடமும் தோல்வியை தழுவியுள்ளது.

அதே நேரம் இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பை வரலாற்றில் முதல்முறையாக வலுவான இங்கிலாந்து அணியை வீழ்த்தி  புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணியில் முஜிபுர் ரகுமான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags:    

Similar News