28 வருடங்களுக்கு பிறகு அர்ஜென்டினா, கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை கைப்பற்றியது
தென் அமெரிக்கா நாடுகளுக்கிடையே கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டி நடைபறுகிறது. இதில் நேற்று பிரேசில் – அர்ஜென்டினா நாட்டிற்கிடையே நடந்த இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நாட்டில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப் போட்டியில் விளையாட பிரேசில், அர்ஜென்டினா அணிகள் தகுதிப் பெற்றது.
இறுதிப் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் மரக்கானா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சொந்த மண்ணில் விளையாடிய பிரேசில் அணி முழு பலத்துடன் விளையாடியது. இந்த போட்டி அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் மெர்சிக்கும், பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மருக்கு இடையே நடக்கும் போட்டியாகவே கருதப்பட்டது.'
ஆட்டம் தொடக்கம் முதலே இரு அணிகளும் படுத் தீவிரமாக கோல் போட முனைப்புடன் விளையாடியது. பிரேசில் அணி வீரர்கள் மெர்சியை வளைப்பதிலேயே கவனத்தை செலுத்தினர். அந்த சமயத்தில் ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் வீரர் ஏஞ்சல் டி மரியா முதல் கோல் அடித்தார்.
பிரேசில் அணி கோலை திருப்புவதற்கு கடுமையாக போராடியது, அர்ஜென்டினாவின் தடுப்பு ஆட்டத்தை பிரேசிலால் உடைக்க முடியவில்லை. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் பிரேசில் அணி 1 கோல் அடித்தாவது சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடுமையாக போராடியது. பிரேசிலின் எந்த முயற்சியும் வெற்றியடையவில்லை, அர்ஜென்டினா அணி இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன் மூலம் அர்ஜென்டினா அணி 28 வருடங்குக்கு பிறகு அதாவது 1993ம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இதுவரை அர்ஜென்டினா அணி 15 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. ரன்னர் கோப்பையை 14 முறை கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்தாற்போல் உருகுவே அணி 15முறை சாம்பியன் பட்டத்தையும் 6 முறை ரன்னர் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.
பிரேசில் அணி இதுவரை 9 முறை சாம்பியன் பட்டத்தையும், 12 முறை ரன்னர் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பி தக்கது. பிரேசில் கால்பந்தாட்ட ரசிகர்கள் ஏமாற்றத்தை அடைந்தனர்.