டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி!

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.;

Update: 2023-05-20 13:48 GMT

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனால் சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் டெல்லி அணி பந்து வீச்சை வெளுத்தனர். இருவரும் பவுண்டரி, சிக்ஸர் என எகிறி அடித்தனர். ருத்துராஜ் 7 சிக்ஸர்களை அடித்து ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சி. 3 பவுண்டரிகளையும் அடித்த ருத்துராஜ் மொத்தம் 50 பந்துகளைச் சந்தித்து 79 ரன்களை எடுத்திருந்தார். அவருக்கு பிறகு டுபே களமிறங்கினார்.

டெவான் கான்வே தனது வழக்கமான அதிரடியைக் காட்டினார். அவர் தன் பங்குக்கு 11 பவுண்டரிகளையும் விளாசினார். 3 சிக்ஸர்களை அடித்த அவர் 52 பந்துகளைச் சந்தித்து 87 ரன்களை எடுத்தார்.

ஷிவம் துபே வெறித்தனமாக ஆடி 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு தோனியுடன் ஜடேஜா களமிறங்கி ஆடினார். 7 பந்துகளில் ஜடேஜா 20 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்திருந்தது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

பிரித்வி ஷா 5 ரன்களிலும், பில் சால்ட் 3 ரன்களிலும் அவுட் ஆக, ரஸ்ஸவ் டக் அவுட் ஆனார். துல் 13, அக்ஷார் 15, அமன் கான் 7 லலித் 6, குல்தீப் 0 என குறைந்த ரன்களில் அவுட் ஆகி வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Tags:    

Similar News