16 கோடி புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... ஏமாற்றிய பென் ஸ்டோக்ஸ்! சிஎஸ்கேவின் பிளான் என்ன?
சிஎஸ்கே அணியால் 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் பென் ஸ்டோக்ஸ். அவர் இல்லாத குறையை கான்வே, மொயின் அலி ஆகியோர் சமாளித்து விடுகின்றனர் என்றாலும் பென் ஸ்டோக்ஸ் உடல் நிலை சரியில்லாமல் இப்படி ஆகிவிட்டதே என ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.;
ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய தினம் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதற்காக நேற்று கொல்கத்தா கிளம்பி சென்ற சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு எளிமையான வெற்றியைப் பெற்றது. ஆனால் ஒரு நாள் இடைவெளியில் அடுத்த போட்டியில் ஆடவுள்ளதால் வீரர்கள் சோர்வாக இருக்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஒருவழியாக இந்த சீசனுக்கு செட் ஆகிவிட்டார்கள். இந்த அணியை அநேகமாக மாற்ற வாய்ப்பில்லை. ஒரே ஒரு துரதிஷ்டம் என்னவென்றால் பல கோடிகளை கொட்டிக் கொடுத்து எடுத்த பென் ஸ்டோக்ஸ் இந்த ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என்பதுதான்.
சிஎஸ்கே அணியால் 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் பென் ஸ்டோக்ஸ். அவர் இல்லாத குறையை கான்வே, மொயின் அலி ஆகியோர் சமாளித்து விடுகின்றனர் என்றாலும் பென் ஸ்டோக்ஸ் உடல் நிலை சரியில்லாமல் இப்படி ஆகிவிட்டதே என ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை எளிதில் வெல்லுமா? அதற்கு டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட் எப்படி உதவ போகிறார்கள்? ஜடேஜா, மொயின் அலி, துபே எப்படி பங்களிப்பார்கள் என்பன உள்ளிட்ட பல விசயங்களை இன்றிரவு தெரிந்து கொள்ள போகிறோம்.
கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஸல், சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய வலுவான அணியாக இருந்தாலும் இதுவரை 4 ஆட்டங்களில் தோல்வியையே தழுவியிருக்கின்றனர். 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள கொல்கத்தா அணி பலம் வாய்ந்த சென்னை அணியை எதிர்கொண்டு வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.