LSG vs RCB பெங்களூரு அணி வெற்றி
LSG அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் RCB பவுலிங்கில் லக்னோ அணியைக் கட்டுப்படுத்தியது. இதனால் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.;
ஐபிஎல் 2023 தொடரின் 42வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறது. இதில் டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்த டேவிட் வில்லி காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார். இதன் காரணமாக அந்த வீரருக்கு பதிலாக விளையாட ஒரு நபர் தேவைப்பட்டது ஆர்சிபி அணிக்கு. இதனால் அந்த இடத்தில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒரே ஆறுதல் இந்த ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை என்பதுதான்.
டாஸ் வென்று பேட்டிங்கைத் துவங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 126 ரன்களை மட்டுமே எடுத்தது.
விராட் கோலி 31 (30), பாஃப் டூப்ளஸிஸ் 44(40), அனுஜ் ராவத் 9 (11), க்ளென் மேக்ஸ்வெல் 4 (5) ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஓரளவுக்கு ஸ்கோர் உயரந்தது. ஆனால் பின்னர் இறங்கி ய வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் அடிக்க தவறியதன் காரணமாக 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்திருந்தது.
லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ரவி பிஸ்னாய், அமித் மிஸ்ரா ஆகியோர் தலை 2 விக்கெட்டுகளை பெற்றிருந்தனர்.
127 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற எளிதான இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியை பெங்களூரு அணி பவுலர்கள் அடுத்தடுத்து வீழ்த்திக்கொண்டிருந்தனர்.
ஜோஸ் ஹேஸல்வுட், கரண் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ், மேக்ஸ்வெல், ஹசரங்கா, ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் பெற்றிருந்தார்.
கிருஷ்ணப்பா கௌதம் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தது தவிர மற்றவர்கள் யாரும் அதிக ரன்கள் எடுக்கவில்லை. 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.