பாக் ஆஸி முதல் டெஸ்ட்: வார்னர் சதம்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது;

Update: 2023-12-14 14:17 GMT

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த வார்னர் 

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று டிசம்பர் 14 தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துத் தந்தனர். 126 ரன்களுக்கு ஆஸ்திரேலியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. கவாஜா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் மார்னஸ் லபுஷேன் 16 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் அசத்தினார். அவர் 211 பந்துகளில் 164 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 346 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் அமர் ஜமால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷகீன் அஃப்ரிடி, குர்ரம் ஷாசத் மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

மிட்செல் மார்ஷ் 15 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Tags:    

Similar News