2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார் அஸ்வின்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வீரராக விளையாடிவரும் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் அஸ்வின், ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.;
இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழா, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியாகும். 14 வது கிரிக்கெட் சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், இந்திய அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளர் ஆவார். இவர் 14 வது ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.இந்த நிலையில் அவர் திடீரென நேற்று 2021 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது
2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம்.
அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன்" எனப்பதிவிட்டுள்ளார். இந்த கடினமான தருணத்தில் அஸிவினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.