ஆசிய விளையாட்டுப் போட்டி: கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தங்கப்பதக்கம் வென்றது.

Update: 2023-09-25 11:44 GMT

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற பெண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் சேர்த்தது.

கிரிக்கெட் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு எதிராக இந்திய பெண்கள் மற்றொரு பேட்டிங் சரிவைச் சந்தித்து மொத்தம் 116/7 ரன்களை எடுத்தது. 89/1 என்ற நிலையில் இருந்த அந்த அணி கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. ஹர்மன்ப்ரீத், பூஜா வஸ்த்ரகர், ரோட்ரிக்ஸ் மற்றும் அமன்ஜோத் கவுர் ஆகியோரின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்த நிலையில், இந்திய பெண்கள் சரிவை எதிர்கொண்டனர்.

இந்த ஆடுகளத்தில் பேட்டிங் சவாலாக இருந்தது, ஆனால் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வியக்கத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 73 ரன்களை சேர்த்தனர் 

இதனை தொடர்ந்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தங்கப்பதக்கம் வென்றது.

கடந்த காலங்களில் மனவேதனைகளை அனுபவித்த இந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் உற்சாகத்தை உயர்த்துவதற்கு இது உதவும்.

2017 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2020 இல் T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, மற்றும் கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆகிவற்றில், அந்த போட்டிகள் அனைத்திலும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இறுதி போட்டியில் மட்டும் தடுமாறினர். அதிர்ஷ்டவசமாக, இன்றைய வெற்றி அந்த கடந்த கால வலியை குறைக்கும். வாழ்த்துக்கள், பெண்கள் அணி. நன்றாக விளையாடினீர்கள்! உங்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது! 

இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடரில் இந்தியாவுக்கு 2வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு தொடரில் துடுப்பு படகு போட்டியில் 2 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்களையும், துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்களையும், கிரிக்கெட் போட்டியில் 1 தங்கப்பதக்கம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா பதக்க பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News