ஆசிய கோப்பை கிரிக்கெட்:சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சொந்த மண்ணில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியை தழுவியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி வெற்றிவாகை சூடி உள்ளது.
ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் நான்கு சுற்றுப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை பந்தாடியது 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று பிற்பகல் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இலங்கை அணியுடன் களம் இறங்கியது இந்திய அணி. முதலில் பந்தடித்த இந்திய அணி ஆட்ட முடிவில் இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்திருந்தது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இலங்கை அணி பந்து அடிக்க தொடங்கியது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் குல்திப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சுகளுக்கு ஈடு கெடுக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் திணறினார்கள். இறுதியாக இலங்கை அணி 172 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது .
இலங்கை கிரிக்கெட் அணியை அவர்களது சொந்த மண்ணில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்று இருப்பதோடு ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. அது மட்டுமல்ல இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.