ஆசிய கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

Update: 2023-11-01 17:37 GMT

உலக கோப்பை (கோப்புபடம்)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை தென் ஆப்பிரிக்கா  190 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி எளிதான வெற்றியை பெற்றது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உட்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டும். இந்த லீக் தொடரில் முதல் 4 இடங்களை பெறும் பணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி வரும். அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பது இந்த விளையாட்டின் விதிமுறை ஆகும்.

அந்த வகையில் இந்தியா இதுவரை பங்கேற்ற ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. இந்த நிலையில் புனேயில்  32 ஆவது லீக் போட்டி இன்று  நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து தென் ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய பணித்தது. தென் ஆப்பிரிக்கா அணியினர்50 ஓவர்களில் 357ரன்களை குவித்தனர். 358ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி  190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

Tags:    

Similar News