ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா- அபார வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட்: போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி. 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Update: 2023-09-11 17:50 GMT

வெற்றிக்களிப்பில் இந்திய அணி வீரர்கள்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடியது. 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி அடைந்தது.

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் நான்கு சுற்றுப் போட்டியில் நேற்று இந்தியாவும் பாகிஸ்தானும் களம் இறங்கின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதனைத் தொடர்ந்து இந்திய அணி பந்தடிக்க தொடங்கியது. இந்திய அணி பந்தடித்துக் கொண்டிருந்த போது மழை காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி இன்று இரண்டாவது நாள் போட்டி நடைபெற்றது. இந்தபோட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 50 ஓவர் முடிவில் 356 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் விராட் கோலி கே.எல். ராகுல் ஆகியோர் சதம் அடித்திருந்தனர். 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.

பாகிஸ்தான் வீரர்கள் தொடக்கம் முதலே சொதப்ப தொடங்கினார்கள். முதல் 20 ரன்களுக்குள் இரண்டு  விக்கெட்டுகளை இழந்தார்கள். தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்களும் சீட்டுக்கட்டு போல் சரிந்தார்கள். இடையில் மழை குறுக்கிட்டது. அதன் காரணமாக சிறிது நேரம் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

மீண்டும் போட்டி நடந்தது. மழை காரணமாக ஓவர்கள் குறைத்து வைக்கப்பட்டிருந்ததால் பாகிஸ்தான் அணி 32 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியை இந்தியா பந்தாடியது என்றே சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இந்திய வீரர்களின் ஆக்ரோஷத்தைக் காண முடிந்தது. இந்திய அணியின் புயல் வேக பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த  போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குல்தீப் யாதவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினார்கள் என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு குல்தீப் யாதவின் பந்து வீச்சில் வேகம் இருந்தது.

Tags:    

Similar News