கேப்டனுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்... !

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் கேப்டனுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்... !;

Update: 2023-11-23 07:15 GMT

கேப்டனாக செயல்படவுள்ள சூர்யகுமாருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூர்யகுமாருக்கு வாழ்த்துதெரிவித்து பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, வரவிருக்கும் T20I தொடருக்கு இந்தியாவின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதையுத்து, நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்வை வாழ்த்தியுள்ளார்.

இந்த தொடர் இன்று வியாழக்கிழமை, நவம்பர் 23-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவின் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மாவும், காயம் காரணமாக விலகிய துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஓய்வு அளிக்கப்பட்டதால் சூர்யகுமார் இந்தியாவை வழிநடத்துவார். ரோஹித், விராட் கோலி, கேஎல் ராகுல், சுப்மன் கில் உள்ளிட்டவர்கள் அனைவருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் அணிக்கு தலைமை தாங்குவார், முதல் மூன்று T20I போட்டிகளுக்கு ருத்துராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக இருப்பார். நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளுக்கு ஸ்ரேயஸ் ஐயர் துணை கேப்டனாக விளையாடுவார். இந்த போட்டிகள் ராய்ப்பூர் மற்றும் பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் தனது Instagram ஸ்டோரி பக்கத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியை, வழிநடத்த தயாராகி வரும் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமாருக்கு "வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

"congrats @surya_14kumar. Go well buddy. Honour to lead the country" என்று அஸ்வின் தனது Instagram ஸ்டோரியில் வாழ்த்தியுள்ளார்.

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்

India squad: Suryakumar Yadav (Captain), Ruturaj Gaikwad (vice-captain), Ishan Kishan, Yashasvi Jaiswal, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Washington Sundar, Axar Patel, Shivam Dubey, Ravi Bishnoi, Arshdeep Singh, Prasidh Krishna, Avesh Khan, Mukesh Kumar

ஆஸ்திரேலிய அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கேன் ரிச்சார்ட்சன், ஏடம் ரிச்சர்ம்பா

Australia squad: Matthew Wade (Capt), Aaron Hardie, Jason Behrendorff, Sean Abbott, Tim David, Nathan Ellis, Travis Head, Josh Inglis, Glenn Maxwell, Tanveer Sangha, Matt Short, Steve Smith, Marcus Stoinis, Kane Richardson, Adam Zampa.

Tags:    

Similar News