முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது பற்றி ஆலோசனை

முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் கரூர் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-08-13 14:45 GMT

முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024- 2025 ஆண்டிற்கு நடத்துவது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பள்ளி கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது. கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளை வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட தலைமையகத்திலிருந்து அறிவுரை பெறப்பட்டுள்ளது.

நடைபெறும்போட்டிகள்

மாவட்ட மற்றும் மாநில அளவில் பள்ளி மாணவ/மாணவியர்கள் (12 முதல் 19 வயதுவரை)-15 விளையாட்டுக்கள்

1)தடகளம். 2.இறகுபந்து, 3 கூடைபந்து, 4.மட்டைபந்து, 5.கால்பந்து, வளைகோல்பந்து 7.கபாடி 6.சிலம்பம், 9.நீச்சல், 10.மேசைபந்து, 11. கையுந்துபந்து, 12.கைப்பந்து, 13.கேரம். 14.செஸ், 15.கோகோ

மண்டல மற்றும் மாநில அளவில் பன்ளிமாணவ / மாணவியர்கள் (12 முதல் 19 வயதுவரை)-06 விளையாட்டுக்கள்

1.டென்னிஸ் 2பளுதூக்குதல், 3 கடற்கரைகையுந்துபந்து 4.வாள்விளையாட்டு, 5ஜூடோ 6)குத்து சண்டை

நேரடி மாநில அளவில் பள்ளிமானாவ / மாணவியர்கள்(12 முதல் 10 வயதுவரை)- 02 விளையாட்டுக்கள்

1.டிராக்சைக்கிளிங். 2ஜிம்னாஸ்டிக்ஸ். மாவட்ட மற்றும் மஷிக அளவில் கல்லூரிமாணவ / மாணவியர்கள் (17 முதல் 25 வயது வரை)-14 விளையாட்டுக்கள்

1.தடகளம். 2.இறகுப்பந்து, 3.கூடைபந்து.4.மட்டைபந்து 5.கால்பந்து 6 வளைகோல்பந்து, 7.கபாடி & சிலம்பம், 9.நீச்சல், 10.மேசைப்பந்து, 11.கையுந்துபந்து, 12 கைப்பந்து, 13.கேரம் 14.செஸ்.

மண்டல மற்றும் மாநிலஅளவில் கல்லூரிமாணவ / மாணவியர்கள் (17 முதல் 25 வயதுவரை)-06 விளையாட்டுக்கள்

1.டென்னிஸ், 2) பளு தூக்குதல் 3)கடற்கரை கையுந்துபந்து. 4.வாள்விளையாட்டு,5)ஜூடோடோ, 7)குத்துசண்டை

நேரடி மாநிலஅளவில் கல்லூரிமாணவ/மாணவியர்கள் (17 முதல் 25 வயதுவரை)- 02விளையாட்டுக்கள்

டிராக் சைக்கிளிங் 2.ஜிம்னாஸ்டிக்ஸ்.

மாவட்ட அளவில் பொதுப் பிரிவு (15 முதல் 35 வயதுவரை) ஆண்கள் / பெண்கள்-06 விளையாட்டுக்கள் 1)தடகளம், 2.மட்டைப்பந்து, 3.கையுந்துபந்து 4.கால்பந்து 5.கேரம். 6.சிலம்பம்.

மாவட்ட மற்றும் மாநில அளவில் பொதுப்பிரிவு (15 முதல் 35 வயதுவரை) ஆண்கள் / பெண்கள்-02 விளையாட்டுக்கள்

இறகுப்பந்து. கபடி

மாவட்ட அளவில் அரசு ஊழியர் (வயதுவரம்புஇல்லை) ஆண்கள் / பெண்கள் 04 விளையாட்டுக்கள்

1தடகளம். 2 செஸ். 3.கபாடி 4.கையுந்துபந்து,

மாவட்ட மற்றும் மாநில அளவில் அரசுஊழியர் (வயதுவரம்புஇல்லை) ஆண்கள் / பெண்கள்-02 விளையாட்டுக்கள்

1இறகுப்பந்து. 2.கேரம்.

மாவட்டமற்றும் மாநில அளலிவான மாற்றுத்திறனாளி வீரர்/வீராங்கனைகள் (வயது வரம்பு இல்லை) ஆண்கள்/பெண்கள்-04 விளையாட்டுக்கள்

உடல் ஊனமுற்றோர் (Physically Challenged) தடகளம், இறகுப்பந்து, சக்கர நாற்காலி

மேசைப்பந்து, பார்வைத்திறன் மாற்றுத்திறன் மாற்றுத் திறனாளி (visually chalanged ) தடகளம் Adapted Volleyball (7players).(Mentally Chalenged) manh. Throw ball (7 Players). செவித்திறன் மாற்றுத்திறனாளி (Hearing Impaired) தடகளம் கபாடி (7 Players)

நேரடி மாநில அளவில் மாற்றுத்திறனாளிவீரர்/வீராங்கனைகள் (வயதுவரம்புஇல்லை) ஆண்கள்/பெண்கள்-விளையாட்டு. தடகளம், கால்பந்து (player’s).

ஒரு விளையாட்டு வீரர் ஒரே ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்கமுடியும். தனிநபர் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு விளையாட்டுவீரர் இரண்டு பிரிவுகளில் பங்கேற்க முடியும்.

போட்டி முன் பதிவு: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் WWW.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம். 25.08.2024-க்குள்பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா. மாநகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட அளவிலான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு மற்றும் மாவட்ட அளவிலான அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கத்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News